ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு
12 January 2026
ஆப்கானிஸ்தானில் இன்று (ஜனவரி 12, 2026) காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து தேசிய நில அதிர்வு மையம் (NCS) வெளியிட்டுள்ள தகவலில் இன்று காலை 8:48 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவாகியுள்ளது. நிலப்பரப்பில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இது 36.65 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 69.54 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள் அல்லது கட்டிடப் பாதிப்புகள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.