திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

11 November 2025

திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது முதலே பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடைமைகள் தொடர்கதை ஆகிவிட்டன. மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு உள்ளது. பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் தமிழகத்தில் அரங்கேறி உளள நிலையில் திமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் அலட்சியப் போக்கை கண்டித்து வருகின்ற 14ஆம் தேதி திண்டிவனம் காந்தி சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக தலைமை கழக செயலாளர் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.