ஆடாதோடை இலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளது. குறிப்பாக இந்த செடியில் உள்ள அனைத்து பாகங்களுமே சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தவை. இந்த இலைகளை தண்ணீர் விடாமல் அரைத்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேன் கலந்து குடித்தால் நுரையீரலில் தேங்கியுள்ள சளியை வெளியேற்றும். அதுமட்டுமின்றி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதேபோன்று இந்த இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் ரத்த அழுத்த பிரச்சனைகள் சரியாகும்..