மலேசியாவில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றதை தொடர்ந்து அதில் பங்கேற்ற நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் இன்று இரவு சென்னைக்கு திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் அவரை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். மேலும் விஜய் வந்தபோது அவரை பார்க்க ஏராளமானோர் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த தள்ளுமுள்ளுவில் விஜய் தடுமாறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் மற்றும் காவலர்கள் உடனடியாக அவரை காரில் பத்திரமாக அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது....