நடிகர் அஜித்குமார் தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியாவுக்கு சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் கரூர் சம்பவம் குறித்து அவர் பேசியுள்ளார். அதில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் தனிநபரை மட்டுமே கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு காரணமாக கூற முடியாது என தெரிவித்தார். நாம் அனைவருமே அதற்கு காரணம்தான் நமக்கான கூட்டத்தை காட்ட வேண்டும் என்பதற்காக கூட்டத்தை திரட்டுவதில் வெறிகொண்ட ஒரு சமூகமாக நாம் மாறி இருக்கிறோம். இது முடிவுக்கு வரவேண்டும் என தெரிவித்தார். மேலும் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதற்கும் கூட்டம் கூடுகிறது. ஆனால் அங்கே இதெல்லாம் நடப்பது கிடையாது. தியேட்டரில் மட்டும் இந்த துயரம் ஏன் நடக்கிறது? சினிமா பிரபலங்களுக்கு மட்டும் ஏன் இது நடக்கிறது? என அவர் கேள்வி எழுப்பினார். மேலும் நாங்கள் ரசிகர்களுடைய அன்புக்காகவே உழைக்கிறோம். ஆனால் உயிரை பணயம் வைத்து அன்பு காட்ட வேண்டாம் அன்பை காட்டுவதற்கு வேறு வழிகள் உள்ளது. இதில் ஊடகத்திற்கும் பங்கு இருக்கிறது என்று அவர் தெரிவித்தார். இது இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.