மாதனுர் அருகே விபத்து
13 November 2025
ஆம்பூர் அருகே முந்திச் செல்ல முயன்ற இரண்டு கார்கள் கவிழ்ந்து விபத்து. கார்களில் பயணம் செய்த அனைவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
வாணியம்பாடி, நவ்.13- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதி சென்னை–பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது வாலாஜாவில் இருந்து வாணியம்பாடியில் உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சுஜாதா என்பவர் தனது காரை ஓட்டி வந்துள்ளார்.
இதே போல் வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி விஜய் என்பவர் முன்னால் சென்ற சுஜாதாவின் காரை முந்தி செல்ல முயன்ற போது, சுஜாதா ஓட்டி சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளாகி நின்றது.
மேலும் பின்னால் விஜய் என்பவர் ஓட்டி வந்த கார், முன்னால் விபத்துக்குள்ளான கார் மீது மோதாமல் இருப்பதற்காக திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் உள்ள தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கார்களில் பயணம் செய்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராமிய போலீசார் விபத்துக்குள்ளான கார்களை சாலையிலிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்து சீர் செய்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.