குமரி:டூவிலர் விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

17 November 2025


மார்த்தாண்டம் சிராயான்குழியில் பைக் ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருபவர் டிப்சியோ (29). இவர் நண்பனின் பைக்கில் பின்னால் உட்கார்ந்து சாங்கை ஜங்ஷன் அருகே வரும்போது, பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள கம்பியில் மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட டிப்சியோ சம்பவ இடத்திலே பலியானார். மற்றொருவர் காயமடைந்த நிலையில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.