குப்பை கொட்டினால் இனி அபராதம்தான் மேயர் தினேஷ்குமார் எச்சரிக்கை

21 November 2025

திருப்பூர் மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை குறித்த கலந்தாய்வு கூட்டம் திருப்பூர் டவுன்ஹால் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கி பேசியதாவது மங்கும் குப்பையை வாரத்தின் அனைத்து நாட்களிலும் மங்காத குப்பையை புதன் சனிக்கிழமை தோறும் சேகரிக்கப்படும்.பொது இடங்களில் ஒரு முறை குப்பை கொட்டினால் வீடுகளுக்கு 50ம் வணிக நிறுவனத்துக்கு 100.ம்.வணிக வளாகத்துக்கு 200.ம் மருத்துவக் கழிவை கொட்டினால் ஆயிரமும் சுகாதாரக் கழிவுகளை பிரிக்காமல் கொட்டினால் 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். ஒரே ஒரு முறை பயன்படுத்தி தூக்கி வீசும் பாலித்தீன் சேமித்தல் வழங்குதல் கொண்டு செல்லுதல் போன்ற குற்றத்திற்கு ஒரு 25 ஆயிரமும் வணிக வளாகங்கள் துணிக்கடைகள் மற்றும் பல் பொருள் அங்காடிகள் போன்ற வணிக நிறுவனங்களுக்கு ரூ. 10,000.மும் அபராதம் விதிக்கப்படும் மேலும் மளிகை கடைகள் மருந்து கடைகளுக்கு ஆயிரமும் சிறிய வணிக விற்பனையாளர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது மூன்றாவது முறை குற்றம் செய்தால் அபராதம் அதிகரிக்கும்.

தினமும் 100 கிலோவுக்கு மேல் குப்பை உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு அவர்களிடமும் உரிய கட்டணம் பெற்று குப்பை எடுக்கப்படும்.
மீன் இறைச்சி கழிவுகளை கொட்டும் கடைகளுக்கு ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார். இந்த கலந்தாய்வு கூட்டத்திற்குஆணையாளர் ஹமித் துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மேலும் மண்டல தலைவர்கள் கோவிந்தராஜ் உமா மகேஸ்வரி மற்றும் கவுன்சிலர்கள்.மாநகராட்சி பகுதிகளில் உள்ள உணவு விடுதிகள் திருமண மண்ட பங்கள் தொழில் நிறுவனங்கள் அடுக்குமாடி குடியிருப்பு வளாகங் கள் தியேட்டர்கள் கல்வி நிறுவனங் கள் தனியார் மருத்துவமனைகள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தி னர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றார்கள். கூட்டத்தில் மங்கும் குப்பை மங்காத குப்பை என தரம் பிரித்து வாங்குவது குப்பையை உரம் அல்லது கேஸ் மேலாண்மை செய்வது தொடர்பாகவும் மின்னணு கழிவுகள் மற்றும் கழிவுகளாக தரம் பிரித்து மேலாண்மை செய்வது குறித்தும் விளக்கி கூறப்பட்டது.

மா.ஜாபர் அலி
செய்தியாளர் திருப்பூர்.