ராஜபாளையத்தில் தொடரும் ஆதார் கார்டு அப்டேட் சாலை மறியல்! விருதுநகர் மாவட்ட கல்வி கல்வித்துறை முடிவெடுக்குமா?

31 October 2025

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு ஆதார் கார்டு அப்டேட் செய்வதற்காக ராஜபாளையத்தில் உள்ள தனியார் வங்கிகள் தபால் நிலையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கானோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் அவலம் நீடித்து வருகிறது. 4 ம் தேதிக்குள் அப்டேட் செய்து தர வேண்டும் என ஒரே நேரத்தில் 3000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பள்ளியில் இருந்து உத்தரவு பிறப்பித்ததால் அப்டேட் செய்வதற்காக கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் அலைமோதும் அவலம் தொடர்கிறது. ராஜபாளையத்தில் தலைமை தபால் நிலையம், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, நகராட்சி அலுவலகம், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், வட்டாட்சியர் அலுவலகம் உள்பட ஏழு மையங்களில் ஆதார் கார்டு அப்டேட் செய்யும் அசதி உள்ளது. இதில் நகராட்சி அலுவலகமும், பாரத ஸ்டேட் வங்கியும் பழுது ஏற்பட்டதால் அப்டேட் செய்ய இயலாத நிலையில் உள்ளது. நிலையில் ஒட்டுமொத்தமாக பொதுமக்கள் ராஜபாளையம் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, தலைமை தபால் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் போன்றவைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் அவலம் தொடர்ந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 30 பேருக்கு மட்டுமே ஆதார் கார்டு அப்டேட் செய்ய இயலும் என விதிமுறை உள்ளதால், முதலில் வரும் 30 பேர் யார் என்பதில் தான் பொதுமக்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. ராஜபாளையம் தலைமை தபால் நிலையத்தில் அதிகாலை 3:30 மணி முதல் அப்டேட் செய்வதற்காக 50க்கும் மேற்பட்டோர் திரண்டனர். நேரமாக ஆக 200 க்கும் மேற்பட்டவர் திரண்டனர். இந்நிலையில் தபால் அலுவலகம் ஏழு மணிக்கு சிறந்த உடன் அத்தனை பேரும் ஒட்டுமொத்தமாக உள்ளே சென்றபோது, 5 பேருக்கு மட்டுமே டோக்கன் கொடுத்துவிட்டு முடிந்து விட்டதாக கூறிவிட்டனர். இதை கண்டித்து டோக்கன் பெற்ற நபர்கள் தவிர அனைவருமே டிபி மில்ஸ் சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். எந்த ஒரு வாகனத்தையும் கடந்து செல்ல அனுமதிக்கவில்லை. இந்நிலையில் தகவல் கிடைத்தவுடன் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தினர் விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடமும் தபால் நிலையத் தினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் மறுபடியும் 30 பேர் வரிசையாக வரும்படி கூறவே அனைவரும் ஒட்டுமொத்தமாக முண்டியடித்துச் சென்றனர். 


இதன் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கல்வித்துறை உடனடியாக இது குறித்து உத்தரவுகளை பிறப்பித்து தேதியை நீட்டித்து தரும்படி பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் நகராட்சி அலுவலகத்தில் மீண்டும் ஆதார் கார்டு அப்டேட் செய்வது தொடர்ந்து செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.