உளுந்தூர்பேட்டை அருகே வினோத உருவத்தில் குட்டியை ஈன்ற ஆடு!
11 August 2025
உளுந்தூர்பேட்டை அருகே வினோத உருவத்தில் குட்டியை ஈன்ற ஆடு! ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விடுமோ என கிராம மக்கள் அச்சம்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள சேந்தமங்கலம் கிராமத்தில் வசித்து வரும் ஆனந்தன் என்பவர் 20 ஆடுகளுக்கு மேல் வளர்த்து ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார் இந்த நிலையில் இவர் வளர்த்து வந்த ஆடுகளில் ஒரு ஆடு இன்று இரண்டு குட்டிகளை ஈன்றது, அதில் ஒரு குட்டி சாதாரண ஆட்டு குட்டியைப் போல் இருந்தாலும் இரண்டாவதாக ஈன்ற குட்டி கரடியைப் போன்ற ஒரு வித்தியாசமான தோற்றத்தில் இருப்பதால் கிராம மக்கள் ஆச்சரியத்துடன் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து செல்கின்றனர் அவ்வாறு பார்த்து செல்பவர்கள் ஒரு சிலர் இதுபோன்று வினோத உருவத்தில் ஆடு குட்டியை ஈன்றதால் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் என பீதியை கிளப்பி விடுவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்....
சப் எடிட்டர் , இரா.வெங்கடேசன்