இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் 79வது பிறந்தநாள் விழா

09 December 2025

உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் கட்சியினர் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்....

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் 79வது பிறந்தநாள் விழாவை காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கேக் வெட்டி கொண்டாடினர் கட்சியின் மாநில துணைத்தலைவர் பேராசிரியர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சங்கராபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் இதயத்துல்லா காங்கிரஸ் கட்சியின் மாவட்ட சேவாதளம் பிரிவு தலைவர் முருகன் நகரத் தலைவர் வழக்கறிஞர் சுரேஷ் உட்பட ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சோனியா காந்தி வாழ்க ராகுல் காந்தி வாழ்க காங்கிரஸ் கட்சி வாழ்க என முழக்கமிட்டனர்...


இரா.வெங்கடேசன், சப்எடிட்டர், கொற்றவை நியூஸ்