10 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள காலாவதியான 7200 மது பாட்டில்கள் அழிப்பு
29 November 2025
10 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள காலாவதியான 7200 மது பாட்டில்கள் அழிப்பு
உளுந்தூர்பேட்டையில் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் 10 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள காலாவதியான7200 மது பாட்டில்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டது...*
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு போலீசாரால் கடந்த சில மாதங்களாக உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் கள்ளத்தனமாக விற்கப்பட்ட மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர் இதில் ரூபாய் 10 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 7,200 மதுபாட்டில்கள் காலாவதி ஆன நிலையில் அதனை அழிக்க உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டார் இந்த நிலையில் கலால் தனி வட்டாட்சியர் விஜய பிரபாகரன் மற்றும் மதுவிலக்கு போலீசார் வருவாய் துறையினர் நீதிமன்ற ஊழியர்கள் என அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இன்று 7, 200 மது பாட்டில்களை உளுந்தூர் பேட்டை கீரனூர் பெரிய ஏரியில் பள்ளம் தோண்டி மதுபானங்களை ஊற்றி அழித்தனர்...
இரா.வெங்கடேசன், சப்எடிட்டர், கொற்றவை நியூஸ்