மதுராவில் 3 குழந்தைகளைக் கொன்று தம்பதி தற்கொலை:

10 February 2026

அதிர்ச்சியூட்டும் சம்பவம்

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் காபர்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான மணீஷ் குமார் (35), அவரது மனைவி மற்றும் 8, 5, 3 வயதுடைய மூன்று குழந்தைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர்.


இன்று காலை வெகுநேரமாகியும் வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அனைவரும் படுக்கையறையில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.


முதற்கட்ட விசாரணையில், மணீஷ் குமார் தனது மூன்று குழந்தைகளையும் கொன்றுவிட்டு, மனைவியுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்து தற்கொலை கடிதம் ஒன்றைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்தத் துயரமான முடிவிற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.