சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரி விடுமுறை....

01 December 2025

தென்மேற்கு வங்க கடலில் உருவான டிட்வா புயலானது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. இருப்பினும் சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. 

இதனால் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்ற மாணவர்கள் மிகவும் அவதி அடைந்தனர். இதன் காரணமாக நாளை சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.


இதேபோன்று திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.