பீகார், கிழக்கு உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், ஒடிசா உள்ளிட்ட பகுதிகளில் சாத் பூஜை என்பது ஒரு முக்கிய பண்டிகை ஆகும். இந்த நிலையில் தற்போது வட மாநிலங்களில் இந்த சாத்பூஜை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு சென்று புனித நீராடுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் கங்கை ஆற்றில் புனித நீராடுவதற்காக சென்றபோது அந்த குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறுவர் புலிக்கும்போது நான்கு சிறுவர்களும் நீண்ட முடியாமல் தத்தளித்து நீரில் மூழ்கினர். பின்னர் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர்கள் நான்கு பேரும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.