பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் வெளியீடு

04 November 2025

தமிழக அரசின் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணையை சென்னையில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 

அதன்படி பத்தாம் வகுப்பு பொது தேர்வு வருகின்ற மார்ச் மாதம் 11-ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி வரை நடைபெறுகிறது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் இரண்டாம் தேதி தொடங்கி மார்ச் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசி அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்தல் ஆணையத்துடன் கலந்து ஆலோசித்த பின்னர் இந்த பொது தேர்வு தேதியை அறிவித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் 12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் தேர்விற்கு கால்குலேட்டர் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.