மா.கம்யூ., கட்சி சார்பில், 108வது நவம்பர் புரட்சி தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம், திருப்பூரில் நடந்தது.

25 November 2025

மா.கம்யூ., கட்சி சார்பில், 108வது நவம்பர் புரட்சி தின நிகழ்ச்சி 23.ம் தேதி திருப்பூரில் நடந்தது. 
மா.கம்யூ., கட்சியினரின் செந்தொண்டர் பேரணி, 
அவிநாசி ரோடு மாவட்ட கட்சி அலுவலகத்தில் இருந்து, ராயபுரம் வரை நடந்தது. 
மழை பெய்ததையும் பொருட்படுத்தாமல், சீருடை அணிந்த கட்சியினர், மிடுக்குடன் நடந்து பேரணியாக சென்றனர். ராயபுரத்தில், பொதுக்கூட்டம் நடந்தது. 
மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் முத்து கண்ணன், செயற்குழு உறுப்பினர் ரங்கராஜ், மாநில குழு உறுப்பினர் காமராஜ் உள்ளிட்டோர் பேசினர். தொடர்ந்து, தேசிய பொது செயலாளர் பேபி, பேசும்போது
சோவியத் யூனியனில் நடந்த நவ., மாத புரட்சி வரலாற்றை விளக்கி பேசினார். தொடர்ந்து, சர்வதேச, இந்திய அரசியல் சூழல் தமிழகம் மற்றும் கேரள அரசு திட்டங்கள் குறித்து பேசினார். 
மேலும் அமெரிக்கா வரி விதிப்பால் கடந்த மூன்று மாதங்களாக திருப்பூரில் மட்டும் 4000 கோடிக்கு உற்பத்தி செய்த பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன தொழிலாளர்களுக்கு விரோதமாக 29 நல சட்ட உரிமைகளை சுருக்கி நான்கு  சட்ட தொகுப்புகளாக மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு எதிராக வருகிற டிசம்பர் 1ஆம் தேதி அகிலம் இந்திய அளவில் போராட்டமும் வருகிற 26 ஆம் தேதி தொழிற்சங்கங்கள் விவசாயிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற உள்ளது என தெரிவித்தார். கோவை மதுரைக்கு வரவேண்டிய மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிறுத்தி உள்ளது பாஜகவை ஆதரிக்காத மாநிலங்களை மாற்ற தாய் மனப்பான்மையுடன் நடத்துவது கவர்னர் மூலமாக மாநில அரசுகளை உதாசீனப்படுத்துவது போன்ற செயல்களை மத்திய அரசு செய்வதை சுட்டிக் காட்டினார். நாடு முழுவதும் தற்போதுள்ள சூழலில் தமிழ்நாட்டு மாடல் முக்கியமாக பார்க்கப்பட வேண்டும் என்றவர்  பாசிச கூட்டணி எதிர் கொள்ள மதச்சார்பற்ற ஜனநாயகம் சக்திகளை ஒன்றிணைக்க வேண்டி உள்ளது. அதற்கு உதாரணமாக திமுக கூட்டணி செயல்படுவதை சுட்டிக் காட்டினார்.  மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய வேண்டும் அதுவே நமது இலக்கு என்றும் வரும் சட்டமன்றத் தேர்தலில் மதவாத பிளவுவாத கட்சிகளை காலூன்ற விடாமல் செய்ய வேண்டும் என்று அவர் அதே கேரளா, ஒடிசா, புதுச்சேரி மாநில தேர்தலிலும் பாரதிய ஜனதா கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்றும் பேசினார். 

மா.ஜாபர் அலி செய்தியாளர் திருப்பூர்