வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த பணி (SIR), காரைக்கால் மாவட்டத்தில் இன்று (04.11.2025) தொடங்கப்பட உள்ள நிலையில், எவ்வாறு திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்பது குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் காரைக்கால் மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர் ASPS ரவி பிரகாஷ், இ.ஆ.ப ஆட்சியாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்கள். இந்த சந்திப்பின் போது, வாக்காளர் பதிவு அதிகாரியும் மற்றும் சார்பு ஆட்சியரும் ஆகிய பூஜா. இ.ஆ.ப., மாவட்ட துணை தேர்தல் அதிகாரியும் மற்றும் துணை மாவட்ட ஆட்சியர் செந்தில்நாதன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த பணி (SIR) காரைக்கால் மாவட்டத்தில் நாளை நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரையில், ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலரும் முன்பே நிரப்பப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களுடன் வீடுகளுக்குச் செல்வார்கள். குடிமக்கள் தங்கள் விவரங்களைச் சரிபார்த்து. கையொப்பமிட்டு, புதுப்பிக்க வேண்டும் எனவும், இப்போது எந்த ஆவணங்களும் தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.