சென்னையில் சுமார் ஒரு லட்சம் செல்லப்பிராணிகளுக்கு குடிமக்கள்

12 December 2025

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இன்று செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அதில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் செல்லப்பிராணிகள் மருத்துவமனைகளில் செல்லப்பராணி, மைக்ரோ சிப் பொருத்துதல் மற்றும் உரிமம் வழங்கும் பணிகள் கடந்த அக்டோபர் எட்டாம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில் இதுவரை 99, 503 செல்லப்பிராணிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 55,788 செல்ல பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செல்லப் பிராணிகளுக்கான உரிமை வழங்குவதற்கு வருகின்ற 14ஆம் தேதி இறுதி நாள் ஆகும். எனவே செல்லப் பிராணிகளை வைத்திருப்பவர்கள் இறுதி நாளுக்குள் அந்தந்த இடங்களில் நடைபெறும் முகாம்களில் சென்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.