தங்கம் வாங்க பூட்டான் போகணுமா

05 December 2025

தங்கம் வாங்க பூட்டான் போகணுமா!!

ஆமாம்  இந்த ஆண்டு தொடக்கம் முதலேயே  தங்கம் விலை அதிகருச்சிட்டே வருது இதே போல வெள்ளி  விலையும் தொடர்ந்து உயர்ந்துக்கிட்டே வருது  இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கபட்ருக்காங்க  இனி வரும் நாட்களில் தங்கம் விலை  குறையுமா அல்லது   உயர்ந்து கொண்டே போகுமா என்ற குழப்பத்தில் மக்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்திய தங்க தர -வணிகர்கள் தங்க நகை முதலீட்டாளர்கள் இறக்குமதியாளர்கள் துபாயில் இருந்து தங்கத்தை வாங்க விரும்புகிறார்கள். ஏனென்றால் அங்கே தங்கம் மலிவான விலையில் கிடைக்கும் என்று அனைவர்க்கும் தெரிந்த ஒன்று உலகிலேயே மலிவான விலையில் தங்கம் கிடைக்கும்  என்று  மக்கள் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் வேற ஒரு நாட்டுல துபாய் விட வேற ஒரு நாட்டில் தங்கம் மலிவாக கிடைக்குறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா அது தான் உண்மை. பூட்டான் நாட்டில துபாயை  விட தங்கம் குறைந்த விலையில் தங்கம் வாங்கலாம் 0% சதவீதம் வரி இல்லாத தங்க நகை  வாணிபம்  சுற்றுல பயணிகளை ஈர்க்கும் வகையில் பூட்டான் அரசு இந்த வசதியை ஏற்படுத்தி இருக்கு. குறிப்பாக திம்பு-மற்றும் மரோ போன்ற நகரங்களில் அங்கீகரிக்கப்பட்ட வரி இல்லாத கடைகளில் மட்டுமே செயல் படுத்தபட்டிருக்கு பூட்டானில் தங்கத்தை விட இறக்குமதி வரி மிகவும் குறைவாக இருக்கிறது.  

 பூட்டானில் ஆண்கள் தங்கம் வாங்கி கொண்டு வர விரும்பினால் -20 கிராம் வரை வாங்கி கொண்டு இந்திய வர முடியும் பெண்கள் 40 கிராம் வரை தங்கம் வரி இல்லாமல் வாங்கலாம் அதிகப்படியான தங்கத்தை கொண்டு வருவது சட்ட விரோதம்  ஆகாது.  ஆனால் இந்திய சுங்க சட்டங்களின் படி தங்கத்தின் மீது கட்டாயம் வரி விதிக்கப்படும் 

அனுமதிக்கப்பட்ட இறக்குமதி: வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மட்டுமே தங்கத்தை இறக்குமதி செய்ய முடியும்-35% சத விகிதம்

வரி செலுத்தாமல் குறிப்பிட்ட அளவிற்கு மேல் தங்கம் கொண்டு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க படலாம் அல்லது வரி விதிக்க படலாம் சரி பூட்டானுக்கு சென்று தங்கத்தை வாங்கிவிடலாம் என்றால் தங்கத்தை வாங்க பூட்டான் அரசாங்கம் ஒரு சிறப்பு நிபந்தனைகளை விதிச்சிருக்கு வெளிநாடுகளை சேர்ந்த  சுற்றுலா பயணிகள் தங்கம் வாங்க விரும்பினால் ஹோட்டல்  -பயணிகள் விடுதிகளில் ஓர் இரவு தங்க வேண்டும் சிறப்பு நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின்னர் தான் வெளிநாட்டினர் அங்கு தங்கம் வாங்க முடியும் குறைந்த விலை வரி இல்லாத சில காரணங்களால் இப்போ தங்கம் வாங்குவதற்கான பிரபலமான ஓர் இடமா மாறிக்கொண்டு வருகிறது.


கொற்றவை செய்தியாளர்
பி.கார்த்திக்.