சாத்தூர் மடைக்கல்வெட்டு
இடம் : சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி, சாத்தூர் வட்டம், விருதுநகர் மாவட்டம்,
தற்போது கல்வெட்டு பாதுகாக்கப்படும் இடம் : திருமலை நாயக்கர் மண்டபம், மதுரை
காலம் : 9ம் நூற்றாண்டு
செய்தி : வட்டெழுத்து (தமிழ்) கல்வெட்டுச்செய்தி : சாத்தூர் மடைக்கல்வெட்டு இவ்வூரின் பழமையை எடுத்துக்காட்டுகிறது. நின்றசீர் நெடுமாறன் காலத்தில் சாத்தூர் குளத்தில் மடைகள் அமைக்கப்பட்டு நீர் நிருவாகம் முறையாகச் செய்யப்பட்டிருந்தது. அவை காலப்போக்கில் தொடர் பராமரிப்பின்மையால் அழிவுற்றன. இதனைக் கண்ணுற்ற இருப்பைக்குடிக்கிழவன் கி.பி.825-இல் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் காலத்தில் சிதைந்த மடைகளை அகற்றிவிட்டு கல்மடைகளை அமைத்து குளத்தைச் சீர்திருத்தினான். இச்செய்தியினை சடையன்மாறனின் வட்டெழுத்துக் கல்வெட்டுடொன்று தெரிவிக்கின்றது.
தகவல்: தமிழக அரசுத்தொல்லியல் துறை
படம்: மோ.பிரசன்னா , திருநெல்வேலி தொல்லியல் கழகம்
Era Chiththaanai நன்றி