ஜெர்மனியில் பீட்சா விநியோகிக்கும் நபராக வேலை செய்கிறார்.ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர்

26 August 2021


ஆப்கானிஸ்தானின் முன்னாள் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் சையத் அஹ்மத் சதாத்தின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளன. 2018 இல் சதாத் ஆப்கானிஸ்தான் அஷ்ரப் கனியின் அமைச்சரவையில் சேர்ந்தார். ஆனால் அஸ்ரப் கனியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக 2020 இல் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் பின்னர் ஆப்கானிஸ்தானை விட்டு சென்ற பிறகு கடந்த ஆண்டு டிசம்பரில் ஜெர்மனி சென்றடைந்த சதாத், லீப்ஜிக்கில் வசிக்கிறார்.

ஜெர்மனி சென்ற சதாத், தன்னிடம் இருந்த பணம் தீர்ந்த பிறகு ஜெர்மன் நிறுவனமான லிவ்ராண்டோவில் உணவு விநியோகம் செய்யும் நபராக பணியாற்றத் தொடங்கினார். ஒரு காலத்தில் பாதுகாப்பு அதிகாரிகளால் சூழப்பட்டிருந்த சதாத் இப்போது சைக்கிளில் பீட்சா வழங்குகிறார். இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பு மற்றும் மின்னணு பொறியியலில் இரண்டு முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.


சதாத் முதலில் அரம்கோ மற்றும் சவுதி டெலிகாம் நிறுவனத்திற்காக சவுதி அரேபியா உட்பட 13 நாடுகளில் 20 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் தகவல் தொடர்பு துறையில் 23 ஆண்டுகள் பணியாற்றினார். தனது அனுபவத்தில் அவர் 2005 முதல் 2013 வரை ஆப்கானிஸ்தானின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றினார். அவர் 2016 முதல் 2017 வரை லண்டனில் உள்ள அரியானா டெலிகாமின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார். பின்னர் 2018 முதல் ஆப்கன் அமைச்சராக பணியாற்றினார்.