திருவாரூர் அருகே மது கூடாரமாக மாறி வரும் பள்ளி விளையாட்டு மைதானம் அதிகாரிகள் கவனிப்பார்களா? பெற்றோர்கள் எதிர்பார்ப்பு!

20 July 2021திருவாரூர் அருகே மது கூடாரமாக மாறி வரும் பள்ளி விளையாட்டு மைதானத்தை அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

திருவாரூர் மாவட்ஜடம் வலங்கைமான் அருகே ஆவூர் ஊராட்சி பகுதியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 20-க்கும் மேற்பட்ட சிறு, குறு கிராமங்களையும் இணைக்கும் பகுதியாக ஆவூர் உள்ளது. இங்கு உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பயன்பாட்டுக்காக ஆவூர் கடைத்தெரு அருகே விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்துக்கு சுற்றுச்சுவர் இல்லை. முறையான பராமரிப்பு இல்லாததால், மைதானத்தை சிலர் மது கூடாரமாக பயன்படுத்தி வருகிறார்கள் என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.  

இதனை அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுத்து பள்ளி மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் வகையில் மைதானத்தை மேம்படுத்துவதுடன், உடற்கல்விக்கான கட்டமைப்புகளையும் ஏற்படுத்தி சுற்றுச்சுவர் அமைத்துத்தர வேண்டும் என பெற்றோர்களும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அதிகாரிகள் கவனிப்பார்களா?

நிருபர் மீனா திருவாரூர்