கரூர் நகராட்சிக்கு விரைவில் காவிரி குடிநீர் திட்டம் – அமைச்சர் செந்தில் பாலாஜி

21 July 2021


கரூர் நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் தினசரி காவிரி குடிநீர் வழங்கும் திட்டம், 30 நாட்களில் தொடங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

 
கரூர் நகராட்சியின் குடிநீர் பயன்பாட்டிற்காக, வாங்கல் காவிரி ஆற்றுப்பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட அவர், அங்குள்ள பழைய குடிநீர் குழாய்களை மாற்றி, புதிய குழாய்கள் அமைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, கரூர் நகராட்சி காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றுவதற்காக 25 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் 30 நாட்களில் கரூர் நகராட்சி பகுதி மக்களுக்கு தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.