விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம்

14 November 2022

விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தேசிய அளவிலான  மக்கள் நீதிமன்றம்

தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றமானது தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்திரவின்படி விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஆர்‌.பூர்ணிமா தலைமையில்  விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த மாபெரும் மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் சமாதானமாக விரைவாக முடித்துக் கொள்ள பல வகைகள் செய்யப்பட்டிருந்தது. விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும் மற்றும் திண்டிவனம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, செஞ்சி, சங்கராபுரம், திருக்கோவிலூர், வானூர், விக்கிரவாண்டி ஆகிய நீதிமன்றங்களில் 16 அமர்வுகள் கொண்டு நீதிபதிகள் விபத்துக்கள் தொடர்பான வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், தொழிலாளர் தொடர்பான வழக்குகள், மின் பயன்பாடு வீட்டு வரி மற்றும் இதர பொது பயன்பாடு வழக்குகள் மேலும் முதல்முறையாக  நுகர்வோர் வழக்குகளும் எடுத்துக் கொண்டு தீர்வு காணப்பட்டது. இங்கு நிலுவையில் உள்ள வழக்குகளை தவிர புதிதாக தாக்கல் செய்ய தகுதியுடைய வழக்குகள் மற்றும் பிரச்சனைகளுக்கும் சமரச முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் இந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணும் வழக்குகளுக்கு  முத்திரைத்தாள் வாயிலாக செலுத்திய கட்டணம் திரும்ப பெரும் வாய்ப்பு, வழக்குகள் தீர்வு கண்டதும் அதற்கான தீர்ப்பு நகல் உத்தரவு உடனே வழங்கப்படும், மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய இயலாது, மக்கள் நீதிமன்றத்தில் வழக்கில் வென்றவர் தோற்றவர் என்ற வேறுபாடு இருக்காது, மக்கள் நீதிமன்றத்தில் வழக்காளர்களுக்கு செலவின்றி விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது.  விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய வழக்கறிஞர் குடும்பத்திற்கு மோட்டார் வாகன விபத்து இழப்பீடு இந்த  மக்கள் நீதி மன்றத்தின் மூலம் அவர்களுக்கு உடனடியாக விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள்  இழப்பீட்டுத் தொகைக்கான ஆணை உடனடியாக வழங்கப்பட்டது.

இந்த மக்கள் நீதி மன்றத்தில் 4980-க்கும்  மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு  2700 க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு சுமார் 25 கோடிக்கு மேல் தீர்வு காணப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை முதன்மை மாவட்ட நீதிபதி  தலைமையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாக உதவியாளர்கள் மற்றும் சட்ட தன்னார்வத் தொண்டு உறுப்பினர்கள் செய்திருந்தனர்...

கொற்றவை செய்திகளுக்காக இரா.வெங்கடேசன் மாவட்ட செய்தியாளர் /சப்எடிட்டர்