உலக பெருந்தமிழர் பி.விருத்தாசலனார் சிலை திறப்பு.

22 February 2021

உலக பெருந்தமிழர் பி.விருத்தாசலனார் சிலை திறப்பு.

தஞ்சாவூர் உலக பெருந்தமிழர் பி.
விருத்தாசலனார் சிலை திறப்பு நிகழ்வு வெண்ணாற்றங்கரையில் உள்ள ந.மு.வேங்கடசாமி தமிழ் கல்லூரியில் முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. சிலையினை பூண்டி புஷ்பம் கல்லூரியின் தாளாளர் துளசி ஐயா வாண்டையார் திறந்து வைத்தார் ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களுக்கு படிக்க உதவி செய்ததுடன் புலவர் கல்லூரி நிறுவி தனித் தமிழ் போராளியாக விளங்கியதுடன் அதிகாரம், பதவிக்காக எந்த ஆட்சியாளர்களிடம் செய்யாத தமிழறிஞராக திகழ்ந்ததுடன் தமிழ்வழிக் கல்லூரியை நிறுவியதுடன் உயிருள்ளவரை தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்டார். அவரின் நினைவை போற்றும் விதமாக அவரிடம் பயின்ற மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து ரூ.15 லட்சம் மதிப்பில் சிலையை நிறுவினர்.நிகழ்வில் இந்திய பொதுவுடமைக் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் மகேந்திரன் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராசேந்திரன், சாது சண்முகம் அடிகளார், மருத்துவக் கல்லூரி முதல்வர் மருது துரை, முனைவர்கள் இளமுருகன், கலியபெருமாள் செளரி ராசன், உள்ளிட்ட திரளானோர் சிலை திறப்பு நிகழ்வில் பங்கேற்றனர்.