பெரம்பலூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மனித சங்கிலி போராட்டம்:

15 September 2021

பெரம்பலூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மனித சங்கிலி போராட்டம்: 

டெல்லியில் கூட்டு பாலியல் செய்து படுகொலை செய்யப்பட்ட  பெண் காவலர் சபியா சைஃபியின் மரணத்திற்கு நீதி கேட்டு  பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் நகராட்சி அருகில் இன்று 15.09.2021 புதன்கிழமை மாலை 5 மணி அளவில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் N. சின்னதுரை தலைமையில் மனித சங்கிலி போராட்டம்  நடைபெற்றது. இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு CPM ன் மாநில துணை தலைவரும் கந்தர்வகோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான  M. சின்னதுரை M. L. A. அவர்கள் பங்கேற்று கண்டனவுரையாற்றினார். இந்த மனித சங்கிலியில் C. P. I பெரம்பலூர் மாவட்ட செயலாளர் வீ. ஞான சேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய அணி மாநில செயலாளர் வீரசெங்கோலன், திராவிடர் கழகத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் சி. தங்கராசு , த. மு. மு. க மாவட்ட செயலாளர் குதரத்துல்லாஹ், ம. ம. க மாவட்ட செயலாளர் மீரா மொய்தீன் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.