நெருங்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் - உலக சுகாதார நிறுவனத் தலைவர் பேச்சு

21 July 2021


வருகிறற 23-ம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கை ஆதரிப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதோனோம் கூறி உள்ளார். டோக்கியோவில் நடந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் பேசிய அவர், உலகிற்கு தற்போது ஒலிம்பிக் போட்டிகள் தேவை என்று தெரிவித்தார். நம்பிக்கையை கொண்டாடுவதற்கான தளமாக ஒலிம்பிக் இருப்பதாகவும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வெற்றி பெறும் என நம்புவதாகவும் டெட்ராஸ் அதோனோம் கூறி உள்ளார்.