உளுந்தூர்பேட்டை ஶ்ரீசாரதா ஆஸ்ரம எஸ்.வி.பி.தொண்டு நிறுவனம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது..

10 January 2023

உளுந்தூர்பேட்டை ஶ்ரீசாரதா ஆஸ்ரம எஸ்.வி.பி.தொண்டு நிறுவனம் சார்பில்
தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது...

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஶ்ரீசாரதா ஆஸ்ரம சேவை பிரிவான எஸ்.வி.பி.தொண்டு நிறுவனம் சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் விழா  உளுந்தூர்பேட்டை ஶ்ரீசாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நகர்மன்ற துணைத் தலைவர் வைத்தியநாதன்,
ஆணையர் அ. சரவணன் ஆகியோர் தலைமையில், அனைத்து நகரமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் ஶ்ரீசாரதா வித்யாலயா பள்ளியின் தாளாளர்  யதீஷ்வரி ஆத்மவிகாசப்ரிய அம்பா ஆசியுரையுடன்
நடைபெற்றது.

இவ்விழாவில் உளுந்தூர்பேட்டை நகராட்சி தூய்மை பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள்,  அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட 152-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கி கௌரவிக்கப்பட்டது.

வெயில், மழை, புயல் பாராமல் மக்களுக்காக அயராது உழைக்கும் தூய்மை பணியாளர்களுக்கு இதுபோன்று கொரவிப்பதன் அவசியம் குறித்து அனைவரும் பேசினார்கள், இவ்விழாவில் தூய்மை பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்... 

கொற்றவை செய்திகளுக்காக இரா.வெங்கடேசன் மாவட்ட செய்தியாளர்  /சப்எடிட்டர்