பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் பேசுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் ட்ரம்ப்..

05 June 2021

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் குற்றச்சாட்டு வைத்துள்ள நிலையில் ட்ரம்ப் அந்த கூற்றை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளார்.


உலகம் முழுவதும் கடந்த 2019 ம் இறுதி முதலாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் உலகம் முழுவதிலும் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில் ஆரம்பம் முதலே கொரோனா வைரஸ் பரவ சீனா காரணம் என அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் பிரிட்டன், நார்வே விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் கொரோனா வைரஸ் இயற்கையாக உருவாகியிருக்க வாய்ப்பில்லை என்றும், ஆய்வகத்தில் இது உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த கூற்றை ஆதரித்து பேசியுள்ள முன்னாள் அதிபர் ட்ரம்ப் தான் இதுகுறித்து முன்பே கூறியதாக தெரிவித்துள்ளதுடன் சீனா உலக நாடுகளுக்கு இழப்பீடு தர வேண்டும் என்று கூறியுள்ளார்.