தொடங்கியது ஒலிம்பிக் 2020 - டோக்கியோ நகர் விழாக்கோலம் பூண்டது!!

23 July 2021


32வது ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கியது. 


ஒலிம்பிக் 2020 கடந்த ஆண்டு குணா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. போட்டிகள் இன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கியுள்ளது. கண்கவர் வானவேடிக்கைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் நிகழ்ச்சி தொடங்கியது. பல்வேறு நாடுகளில் இருந்து முக்கிய தலைவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. சார்பாக 6 தலைவர்களுக்கு அழைப்பு.

2020 டோக்கியோ ஒலிம்பிக் திருவிழாவில் இந்திய தரப்பில் சுமார் 30 பேர் கொண்ட குழு தொடக்க விழாவில் பங்கேற்றனர். மேரி கோம், மன்பிரீத் சிங் தேசிய கொடியை ஏந்தி அணிவகுப்பை வழிநடத்தினர். தொற்று பரவல் காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.