அக்னிபாத்திற்கு எதிராக வன்முறை போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் ராணுவத்தில் சேர முடியாது- ராணுவ உயர் அதிகாரிகள் விளக்கம்

19 June 2022

அக்னிபாத் திட்டத்தின் கீழ் கடற்படையில் பெண்களை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேச சேவைக்காக பணியின் போது உயிரை தியாகம் செய்யும் வீரர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு அக்னிபாத் திட்டத்திற்கு, வட மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தில் ஆட் சேர்ப்பு குறித்து பாதுகாப்புத்துறை சார்பில் முப்படைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர். அப்போது பேசிய லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி, இந்திய ராணுவத்தில் ஒழுக்கம்தான் அடித்தளம் என்றார். அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தீவைப்பு உள்ளிட்ட நாசவேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு ராணுவத்தில் இடமில்லை என்றும் அவர் கூறினார். ராணுவத்தில் சேர விரும்புபவர்களுக்கும் எந்த போராட்டத்திலும் ஈடுபட்டதில்லை என்ற சான்றிதழ் தேவை என்றும், இது தொடர்பாக காவல்துறை முழு அளவில் விசாரணை நடத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதையும் படியுங்கள்: லாலு பெயர் கொண்டவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டி அக்னிபாத் திட்டத்தின் கீழ் சேரும் வீரர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் 1.25 லட்சமாக உயரும் என்றும் அவர் தெரிவித்தார். முப்படைகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 17,600 பேர் முன்கூட்டியே ஓய்வு பெறுகின்றனர் என்றும், ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்வீர்கள் என்று யாரும் அவர்களிடம் கேட்க முயற்சிக்கவில்லை என்றும் அவர் கூறினார். அக்னிபாத் திட்டத்தில் சேரும் வீரர்களுக்கு பணி நிறைவுக்கு பிறகு மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் சார்பில் வேலை வாய்ப்புக்கான இடஒதுக்கீடு அறிக்கப்பட்டுள்ளது, வன்முறை சம்பவங்களின் எதிரொலியாக இல்லை என்றும், அவர் விளக்கம் அளித்தார். அக்னிபாத் திட்டத்தில் இணையும் அக்னி வீரர்கள் பணியின் போது நாட்டிற்காக உயிரை தியாகம் செய்திருந்தால் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி தெரிவித்தார்.

அக்னிபாத் திட்டத்தின் கீழ் கடற்படையில் பெண்களை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு போர் கப்பல்களிலும் பணி வழங்கப்படும் என்றும் வைஸ் அட்மிரல் தினேஷ் திரிபாதி குறிப்பிட்டார். அக்னிபாத் திட்டத்தில் சேரும் முதல் பேட்ஜ் கடற்படை அக்னி வீரர்களுக்கு நவம்பர் 21 முதல் ஒடிசாவில் உள்ள ஐஎன்எஸ் சில்கா பயிற்சி நிறுவனத்தில் பயிற்சிகள் தொடங்கும் என்றார். இந்திய விமானபடையில் அக்னிவீரர்களுக்கான ஆன்லை தேர்வு செயல்முறை முதல் கட்டமாக ஜூலை 24ம் தேதி தொடங்கும் என்றும், ஏர் மார்ஷல் எஸ்கே ஜா குறிப்பிட்டார். இதில் தேர்வு செய்யப்படும் முதல் பேட்ஜ் வீரர்களுக்கு டிசம்பர் 30க்குள் பயிற்சிகள் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.