வில்லன் நடிகர் 2வது திருமணம் மலையாள நடிகையை மணந்தார்

21 January 2022

மலையாள நடிகை சின்னு குருவிலாவை வில்லன் நடிகர் ஹரீஷ் உத்தமன் 2வதாக திருமணம் செய்துகொண்டார்.

தமிழில் 'தா' என்ற படத்தில் ஹீரோவாக நடித்தவர், ஹரீஷ் உத்தமன். பிறகு 'கவுரவம்', 'பாண்டியநாடு', `தனி ஒருவன்', 'பாயும் புலி', 'றெக்க', 'தொடரி', 'பைரவா', 'டோரா' உள்பட பல படங்களில் வில்லனாக நடித்தார். தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ள ஹரீஷ் உத்தமன், கடந்த 2018ல் மும்பையை சேர்ந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அம்ரிதா கல்யாண்பூர் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக 2019ல் அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்நிலையில், மலையாள நடிகையும், ஒளிப்பதிவாளருமான சின்னு குருவிலா என்பவரை ஹரீஷ் உத்தமன் 2வதாக திருமணம் செய்துகொண்டார். அவர்களின் காதல் திருமணம் மாவேலிக்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று நடந்ததாகவும், சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் தங்கள் திருமணத்தை பதிவு செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் 'நார்த் 24 காதம்', 'கஸபா', 'லுக்கா சுப்பி' ஆகிய படங்களில் சின்னு குருவிலா நடித்துள்ளார்.