16ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது

13 October 2021

ஆயுதப்பூஜை, விஜயதசமி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவிருக்கும் நிலையில் நாளை, நாளை மறுநாள் அரசு விடுமுறை என்பதால், சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை ஏற்று தமிழக அரசு சார்பில் சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சொந்த மாவட்டங்களில் இருந்து தொலைதூரத்தில் கணிசமான ஆசிரியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், கோரிக்கையை ஏற்று சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.