20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்புதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உண்ணாவிரத ஈடுபட்டுள்ளனர்

19 March 2023

20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்புதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உண்ணாவிரத ஈடுபட்டுள்ளனர்


மயிலாடுதுறையில் கலெக்டர் அலுவலகம் முன்பு 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 27 மாத அகவிலைப்படி நிலுவையினை உடனே வழங்கிட வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும், ஒப்பந்த ஆசிரியர்களை முறைபடுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மயிலாடுதுறை குத்தாலம் தரங்கம்பாடி சீர்காழி தாலுகா பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 300க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.