இன்று இரு முறை கூடும் தமிழக சட்டப்பேரவை

08 September 2021

தமிழக சட்டப்பேரவையில், துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. வருகிற 13-ஆம் தேதியுடன் கூட்டத்தொடர் முடிவடையும் நிலையில், அவை நடவடிக்கையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இன்று காலை பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு அவை மீண்டும் கூடி, சட்டம், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பவியல் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.