புதிய திருச்சி போலீஸ் கமிஷனர் நேற்று கமிஷனர் அலுவலகத்தில் பதவியேற்பு.

03 April 2021

திருச்சி காவல் நிலையங்களில் அரசியல் கட்சியினர் கவர் கொடுத்த விவகாரத்தில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த லோகநாதன், தேர்தல் கமிஷனால் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டார்.  இதனை தொடர்ந்து நேற்று திருச்சி மாநகர போலீஷ் கமிஷனராக அருண் பொறுப்பேற்று கொண்டார்.  இவர் ஏற்கனேவே திருச்சியில் பணியாற்றிய போது….. லாட்டரி டிக்கெட்டுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை எடுத்து அதற்கு துணை போன 11 அதிகாரிகளை துாக்கி அடித்தவர். போலீசார் சொந்த வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்று உத்தரவிட்டவர். குழந்தைகளுக்கான இதய சிகிச்சை முகாம் நடத்தியவர். மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தை திறமையாக கையாண்டவர். இத்தனை அதிரடிக்கு சொந்தக்காரரான இவர் ஏற்கனவே திருச்சியை பற்றி நன்று அறிந்தவர் என்பதால் விட்ட இடத்தில் இருந்து தனது அதிரடியை தொடர்வார் என்ற எதிர்பார்ப்பு திருச்சி மக்களிடையே எகிறி உள்ளது.