சவரனுக்கு 312 ரூபாய் குறைந்த தங்கம் விலை.

16 March 2022

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 312 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,336-க்கு விற்பனையாகிறது.

இன்று கிராமுக்கு 39 ரூபாய் குறைந்து, ரூ.4,792-க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 72,800 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து ரூ.72,300-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.72.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.