வானதி சீனிவாசன் மகன் ஓட்டி வந்த கார் நேற்று இரவு கவிழ்ந்து விபத்து

13 September 2021

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மகன் ஓட்டி வந்த கார் நேற்று இரவு கவிழ்ந்து விபத்து


பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மகன் ஓட்டி வந்த கார் நேற்று இரவு சேலம் பட்டர்பிளை மேம்பாலத்தில் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்து அதிஷ்டவசமாக சிறு காயமின்றி உயிர் தப்பினார்பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மகன் ஆதர்ஸ்  இவர் சென்னையில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார் இந்த நிலையில் தனது உறவினர் திருமணத்திற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை சென்றுள்ளார் திருமண நிகழ்ச்சிகள் முடித்துவிட்டு நேற்று மாலை நேரத்தில் கோவையிலிருந்து தனது அதி நவீன காரில் சென்னைக்கு புறப்பட்டார் கோவையில் இருந்து சென்னை செல்லும் போது சேலம் வழியே வந்து கொண்டிருக்கும்போது இரவு பதினோரு மணி அளவில் கொண்டலாம்பட்டி  பட்டர்பிளை மேம்பாலத்தில் வளைவு சாலையை  திருப்ப முயலும்போது திடீரென கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது 

தகவலறிந்த பாரதிய ஜனதா கட்சியின் சேலம் மாவட்ட  நிர்வாகிகள் மற்றும் கொண்டலாம் பட்டி காவல் துறையினர்  விரைந்து சென்று விபத்தில் சிக்கிய ஆதர்ஸ்  மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர் எந்தவித காயமும் இன்றி உடல் நலமாக உள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர் இதனையடுத்து அவர் மாற்று காரில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் இந்த விபத்து குறித்து அன்னதானபட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை .

சேலம்.
எஸ் கே சுரேஷ் பாபு.