ஆகஸ்டில் " வலிமை"யின் அடுத்த அப்டேட் : தல ரசிகர்கள் உற்சாகம்!!

17 July 2021


வலிமை’ படத்தின் டீசரும் அப்படத்தின் முதல் பாடலும் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடியாத நிலையில் தள்ளிப்போனது. தற்போது படப்பிடிப்புகள் நடத்த அனுமதி அளித்துள்ளதால், தற்போது முக்கியமான சண்டைக் காட்சிகளும் இணைப்புக் காட்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

சமீபத்தில், இப்படத்தின் மோஷன் போஸ்டரும் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியான நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் ’வலிமை’ படத்தின் முதல் பாடலும் டீசரும் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம்கூட இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ‘வலிமை’ படத்தின் முதல் பாடல் விரைவில் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.