மாஸ்க், சானிடைசர் விலையை நிர்ணயித்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

08 June 2021

மாஸ்க் மற்றும் சானிடைசர் ஆகிய இரண்டும் கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருட்கள் ஆகிவிட்ட நிலையில் மாஸ்க், சானிடைசர் உள்பட 15 பொருட்களின் விலையை நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வீட்டை விட்டு வெளியே சென்றால் மாஸ்க் போட்டு விட்டு தான் வெளியே செல்ல வேண்டும் என்றும் அதே போல் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது சானிடைசர் உபயோகிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
ஆனால் அதே நேரத்தில் மாஸ்க், சானிடைசர் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதை அடுத்து தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் விலை நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது 

மாஸ்க், சானிடைசர்உள்பட 15 பொருட்கள் அத்தியாவசிய பொருட்கள் என அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு விலை விவரம் பின்வருமாறு.

 
கிருமி நாசினி 200 மில்லிலிட்டர் விலை ரூ.110 ; என் 95 முககவசம் விலை ரூபாய் 22 ; பிபிஈ கிட் விலை ரூபாய் 273 
கையுறை ரூ.15