தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சிறப்பு பேரவை கூட்டம்...
02 December 2022
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சிறப்பு பேரவை கூட்டம்...
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கள்ளக்குறிச்சி மின் பகிர்மான வட்டக் கிளையின் சிறப்பு பேரவை கூட்டம் உளுந்தூர்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் கண்ணன் நினைவரங்கத்தில் மாவட்ட தலைவர்
கே.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது, இந்த கூட்டத்திற்கு
மாநில செயலாளர்
தங்க.அன்பழகன் துவக்கரையாற்றினார், மாவட்ட செயலாளர்
ஆர்.ராஜாமணி விளக்க உரையாற்றினார், மாநில துணை பொது செயலாளர்
எம்.பாலசுப்பிரமணி பேசுகையில் மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும், மின்சார சட்ட திருத்தம் 2002-ஐ ரத்து செய்ய வேண்டும், ஊழியர்கள் மற்றும்
ஓய்வூதியர்களுக்கு பாதகமான
டிபி 2/ 12.4. 2022 ரத்து செய்ய வேண்டும்,
1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பழைய ஓய்வூதியம் பணிக்கொடை மற்றும் குடும்ப ஓய்வூதியம் அளித்திட வேண்டும், ஒப்பந்த ஊழியர் பணிக்காலம் 50% சேர்த்து ஓய்வூதியம் திருத்தம் செய்திட வேண்டும், ஒப்பந்தப்படி தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பஞ்சபடியை வழங்கிட வேண்டும், அரசின் மின்சார வாரியமே ஓய்வூதியத்தை தொடர்ந்து வழங்கிட வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விதவை, மகள், விவாகரத்து மற்றும் ஊனமுற்றவர்களுக்கு குடும்ப ஓய்வு ஊதியம் வழங்கிட வேண்டும், தேர்தல் வாக்குறுதியின் படி 70 வயது நிரம்பியவர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விளக்கி பேசினார் இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்றோர் நலஅமைப்பின் மாவட்டத் துணைத் தலைவர் அம்பாயிரம், மாவட்ட துணைத் தலைவர்
எஸ்.வேலு, நிர்வாகிகள் எ.சம்சுதீன், பி.விருத்தகிரி, என்.அருணாச்சலம்,
ஏ.பாலசுப்பிரமணியன், டி.ராஜாராம், கே.குப்புசாமி, பி.பெரியநாயகி, சி.ஜோதி, எம்.கருணாகரன், எம்.குணசேகரன், பி.தேவராஜன், டி.ஜெயபாலன், கே.வெங்கடாசலம், பி.தவமணி, ஏ.சரஸ்வதி, உள்ளிட்ட நிர்வாகிகளும் உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர்...
கொற்றவை செய்திகளுக்காக
இரா.வெங்கடேசன்
மாவட்ட செய்தியாளர் /சப்எடிட்டர்