சசிகலா தலைமையில் அதிமுக செயல்பட்டால் அம்மா ஆட்சியை உருவாக்க முடியும்!

12 February 2021

சசிகலா தலைமையில் அதிமுக செயல்பட்டால் அம்மா ஆட்சியை உருவாக்க முடியும், நாங்கள் அரசை கலைக்க வேண்டும் என செயல்படவில்லை முதல்வரை மாற்ற வேண்டும் என்று தான் எதிர்த்தோம் எனவும், நாங்கள் நடுரோட்டில் இல்லை எங்களை டிடிவி தினகரன் உயர்பதவி வழங்கி அழகுபார்க்கிறார் என தகுதி நீக்கம்செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மாரியப்பன் கென்னடி, கதிர்காமு பேட்டி.


தகுதி நீக்கம்செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மாரியப்பன் கென்னடி, கதிர்காமு , முத்தையா, தங்கதிரை ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது : .


18சட்டமன்ற உறுப்பினர்களை டிடிவி தினகரனை நம்பி போனதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்கள் என கூறுவது தவறானது எனவும் ஓபிஎஸ் எதிர்த்தபோது அம்மாவின் ஆட்சியை உருவாக்க அனைவரையும் ஒன்றிணைத்து இந்த ஆட்சியை உருவாக்கியவர் டிடிவி தினகரனும், சசிகலாவும் தான், நாங்கள் அரசை கலைக்க வேண்டும் என செயல்படவில்லை முதல்வரை மாற்ற வேண்டும் என்று தான் எதிர்த்தோம் எனவும், நாங்கள் நடுரோட்டில் இல்லை எங்களை டிடிவி தினகரன் உயர்பதவி வழங்கி அழகுபார்க்கிறார்

18சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்ததே எடப்பாடிதான்

எடப்பாடியை தேர்வு செய்த எங்களை தகுதி நீக்கம் செய்துவிட்டார்

பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி தவறான தகவல்களை கூறுகிறார்.

மனசாட்சியை அடமானம் வைத்து பேசிவருகிறார் , வரும் தேர்தலில் மக்கள் தக்க பதிலடி தருவார்கள்

முதல்வர் மற்றும் சி.வி.சண்முகத்தின் பேச்சு கண்டிக்கதக்கது

தன்னிடம் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை தக்க வைப்பதற்காக டிடிவி தினகரன் மீது பழி சுமத்துகிறார் எடப்பாடி

எடப்பாடி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மட்டும் தான் சசிகலாவையும் டிடிவி தினகரனையும் எதிர்க்கின்றனர்

சிவி சண்முகத்திற்கு மாவட்ட செயலாளர் பதவியும், ஜெயக்குமாருக்கு நிதி அமைச்சர் பதவியும், எடப்பாடிக்கு முதல்வர் பதவியும் அளித்தவர் சசிகலா

எடப்பாடி சசிகலாவிற்கு துரோகம் செய்து கழுத்தறுத்துவிட்டார். 

சசிகலாவிற்கு அளிக்கப்பட்ட வரவேற்பு மிகப்பெரிய சாதனை,  தொண்டன் சொந்த செலவில் நேரில் வரவேற்க வந்தனர்.

சசிகலா தலைமையில் அதிமுக செயல்பட்டால் ஆட்சியை உருவாக்க முடியும் இல்லையெனில் அதிமுக தோல்வி அடையும்

அதிகாரம் வேண்டும் என்ற பயத்தில் சசிகலாவை எதிர்க்கின்றனர்

மனசாட்சி இன்றி அமைச்சர்கள் பேசி வருகின்றனர்.


இதை தொடர்ந்து பேசிய தகுதிநீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.கதிர்காமு  பேசுகையில் 

சசிகலாவிற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து அச்சத்தில் எங்கள் மீது குற்றம்சாட்டுகிறார் எடப்பாடி


நாங்கள் 18பேரும் ஆதரவு தராவிட்டால் எடப்பாடி நடுரோட்டிற்கு சென்றிருப்பார்


ஆட்சியை ஒப்படைத்த சசிகலாவிற்கும், ஆதரவளித்த 18எம்.எல்.ஏக்களுக்கும் உண்மையாக இல்லாத எடப்பாடி தமிழக மக்களுக்கு எப்படி விசுவாசமாக இருப்பார் என்றார்

இதனைதொடர்ந்து பேசிய அமமுக தலைமை நிலைய செயலாளர் கே.கே.உமாதேவன் பேசுகையில் :

சி.வி.சண்முகத்தின் பேச்சு கண்டிக்கதக்கது

பதவிவெறி பிடித்து பதட்டத்தால் அநாகரிகமாக பேசிவருகின்றார்

பதவி தந்தவர்களையே பேசுவது அநாகரிகமானது 

18சட்டமன்ற உறுப்பினர்களும் அம்மாவின் ஆட்சியை பாதுகாக்க வாக்களித்தவர்களை தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் திமுகவிற்கு ஆதரவாக வாக்களித்த 12சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்து துரோகம் இழைத்தவர் எடப்பாடி

அதிமுகவை கட்டுகோப்போடு  வழிநடத்த முயல்பவர் டிடிவி தினகரன்


பெருந்தன்மையோடு முதல்வரை வழிநடத்தியவர் டிடிவி தினகரன்
எனக் கூறினார்