பொள்ளாச்சி அருகே மறுவாழ்வு முகாமில் ஆய்வு
28 September 2022
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு தமிழக முதல்வர் அறிவித்தார். இதனையடுத்து அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் முதல் கட்டமாக மறுவாழ்வு முகாம்களில் 3500 வீடுகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார், மற்றும் கோட்டூர் முகாம்களில் நடைபெறும் பணிகள் குறித்து அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாரன்ஸ் மற்றும் வருவாய் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, இதுவரை திண்டுக்கல் மாவட்டத்தில் 321 வீடுகள் முழுமையாக கட்டப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் ஆழியார் மற்றும் கோட்டூர் மறுவாழ்வு முகாம்களில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகள் நடைபெறும் பொழுது அங்கு குடியிருந்தவர்களுக்கு மாற்று இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு தங்க வைக்கப்படுகின்றனர். சிலர் வாடகை வீட்டிலும், சிலர் தற்காலிக குடியிருப்புகளிலும், சிலர் பிற மறுவாழ்வு மையங்களிலும் தங்கியுள்ளனர்.
இப்பணிகள் வரும் 2023 மார்ச் மாதத்திற்குள் அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் 3500 வீடுகள் கட்டுவதற்கான டெண்டர் பணிகள் முடித்து கட்டுமான வேலைகள் நடைபெற்று வருகிறது. மேலும் 3700 வீடுகள் கட்டுவதற்கான டெண்டர் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என இலங்கை தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணைகரத்தின் ஆணையர் ஜெசிந்தா லாரன்ஸ் தெரிவித்தார்.
G. கவி பிரசாந்த்
கொற்றவை செய்தியாளர்
கோவை மாவட்டம்
பொள்ளாச்சி