கெத்தா..மாஸா ரீரிஸான சூர்யாவின் ’’வாடிவாசல்’’ டைட்டில் லுக் !

16 July 2021


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகிவரும் வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது.


அசுரன் படத்திற்குப் பிறகு வெற்றிமாறன் சூர்யாவை நடிப்பில் வாடிவாசல் என்ற படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜிவி.பிரகாஸ் இசையமைக்கவுள்ளார்.

தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்தின் வேலைகள் முடிந்தபின் வாடிவாசலின் நடிக்கவுள்ளார் அவர்.

இந்நிலையில் தயாரிப்பாளார் தாணு வாடிவாசல் படத்தின் முக்கிய அப்டேட் வெளியிட்டிருந்தார். அதில்

வாடிவாசல் பற்றிய அறிவிப்பிற்காக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தமிழ் நெஞ்சங்களுக்கு நல்விருந்தாய், #வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை நாளை மாலை 5:30'க்கு வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

அதன்படி தற்போது தயாரிப்பாளர் தாணு தனது டுவிட்டர் பகக்த்தில் இதை வெளியிட்டுள்ளார். அதில். நம் வீரத்தையும் வரலாற்றையும் சுமந்து நிற்கும் #வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை உங்கள் பார்வைக்கு வெளியிடுவதில் பேரின்பமும் பெருமையும் கொள்கிறேன் #VaadiVaasalTitleLook @Suriya_offl @VetriMaaran @gvprakash #VaadiVaasal எனப் பதிவிட்டுள்ளார்.

சூர்யா ரசிகர்கள் மற்றும் வெற்றிமாறன் ரசிகர்கள் இதை வைரலாக்கி இணையதளத்தில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.