விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் காதல் தோல்வியால் வாட்ஸ் ஆப்பில் வீடியோ பதிவிட்டு தற்கொலை.

10 June 2021


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த
 முருகன் என்பவரது மகன் அழகு முருகன் வயது 19 இவர் தனியார் கல்லூரியில் பொறியியல் முதலாமாண்டு படித்து வருகிறார். 


இவர் அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார் அந்தப் பெண் சில நாட்களாக பேச மறுத்து வந்துள்ளார். 

இதனால் மனம் உடைந்த அழகுமுருகன் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சம்பவம் குறித்து தகவலறிந்த வெம்பக்கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் 


மேலும் இறப்பதற்கு முன் உருக்கமான வீடியோவும் பதிவிட்டுள்ளார்

 சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் டிக் டாக் செயலியில் பல்வேறு வீடியோக்கள் பதிவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாத்தூர்
க.அருண்பாண்டியன்