தெற்கு ஆசியாவில் தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக தமிழகம் மாறும்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை!!

20 July 2021


புதிய தொழில் வாய்ப்புகளையும், முதலீட்டாளர்களையும் இருப்பதே முதல் இலக்கு என முதலமைச்சர் 

மு.க.ஸ்டாலின் "முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு' விழாவில் பேச்சினார்.

தெற்காசியாவில் தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதை இலக்கு என்றும், தொழில் புரிதலை எளிதாகவும், அதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் புற சூழலை உருவாக்குவதுமே தமிழக அரசின் கடமையாக உள்ளது. புதிய தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மின் வாகன உற்பத்தி சூரிய மின்சக்தி உள்ளிட்ட துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் இந்த செயல் திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறினார். 

மேலும், தமிழக அரசின் துரிதமான செயல்பாடுகளால் கொரோனா பரவல் கட்டுபடுத்தப்பட்டுள்ளது என்றார். 

முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாடு நிச்சயம் மாறும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் இந்த கருத்தரங்கில் பங்கேற்ற தொழிற்சங்க தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், மேலும் முதலீட்டாளர்களை ஈர்க்கும், தமிழக இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பினை பெருக்கவும் துணை நிற்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.