உங்களுக்கு கல்யாணமா ? சுருதிஹாசன் சொன்ன பதில்!

08 June 2021

நடிகர் கமல்ஹாசனின் மகளும், முன்னணி நடிகையுமான ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் திருமணமாகி விட்டதா என்ற ரசிகரின் கேள்விக்கு பதில் கூறியுள்ளார்.


தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு, புலி, வேதாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஸ்ருதிஹாசன்.

இவர் தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் இன்று இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுக்குப் பதில் அளித்தார். அப்போது ஒரு ரசிகர், உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா எனக் கேட்டார். இதற்கு அவர் இல்லை எனக் கூறினார்.