தமிழக பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தீவிரம்

12 June 2021


வரும் 14 ஆம் தேதி முதல் தமிழகத்திலுள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குவதற்காக நடைமுறைகளை பள்லிக் கல்வித்துறை செய்துள்ளது.

கடந்தாண்டு இந்தியாவில் கொரொனா பரவியபோது, மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியது. அவ்வப்போது மாநிலத்திற்கு மாநிலம் கொரொனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் அனைத்துப் பள்ளிகளும் மாணவர்களின் நலன் கருதி மூடப்பட்டது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் இரண்டாவது கொரொனா அலை தீவிரமடைந்த நிலையில் தற்போது குறையத்தொடங்கியுள்ளது.

எனவே தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெரும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்த நிலையில்,வரும் 14 ஆம் தேதி முதல் பள்ளிகளில்ன் மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கான நடைமுறைகளை பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது. அத்துடன் 14 ஆம் தேதி முதல் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.