ரஷ்யாவில் வெளியாகும் அல்லு அர்ஜுனின் புஷ்பா..

30 November 2022

நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியானது புஷ்பா படம்.சிவப்பு சந்தன மரக் கடத்தலை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் சர்வதேச அளவில் அதிகமான வசூலை ஈட்டியது.தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான சூட்டிங் விறுவிறுப்பான வகையில் உருவாகி வருகிறது. நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சமந்தா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியானது புஷ்பா. மரக்கடத்தலை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தில் லாரி ஓட்டுநராக இருந்து மரக்கடத்தலில் ஈடுபடுபவராக அல்லு அர்ஜுன் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாகியிருந்தார் ராஷ்மிகா மந்தனா.படத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் பாடல்கள் அனைத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக சமந்தா இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். ஊ சொல்றியா என்ற அந்தப் பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து ஆட்டம் போட வைத்தது. இந்தப் பாடலுக்கு முன்னதாக தன்னுடைய விவாகரத்து அறிவிப்பை சமந்தா வெளியிட்ட நிலையில், இந்தப் பாடல் அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது.இந்தப் படத்தில் தன்னுடைய வழக்கமான லுக்கில் இருந்து மாறுபட்டு நடித்திருந்தார் அல்லு அர்ஜுன். இந்தப் படம் பான் இந்தியா படமாக, தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய மொழிகளில் வெளியானது. இதனிடையே, சர்வதேச அளவில் படத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரத்தை தொடர்ந்து தற்போது ரஷ்யாவிலும் அந்த மொழியில் டப் செய்யப்பட்டு வரும் டிசம்பர் 8ம் தேதி படம் ரிலீசாக உள்ளது.